தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது - கே.எஸ். அழகிரி! - TN Congress president K.S.Alagiri

சேலம்: மோடி தலைமையிலான மத்திய அரசு, திவலாகி விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது -கே.எஸ்.அழகிரி!

By

Published : Aug 28, 2019, 1:23 PM IST

சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிதம்பரம் கைது நடவடிக்கை எல்லை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. சிதம்பரத்திற்கு மன அழுத்தத்தைத் தர வேண்டும் என்பதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் உண்மையை முற்றிலும் மறைக்க முயல்கிறார்கள் என கடுமையாக சாடினார்.

மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது -கே.எஸ்.அழகிரி!

மேலும் பேசிய அவர், இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்து விழுந்துள்ளது. நிர்மலா சீதாராமன் இதுவரை பொருளாதாரத்தில் பின்பற்றிவந்த மரபுகளையும் நீதிகளையும் ஏன் மீறுகிறார்கள். ஆட்டோ தொழில் துறையில் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மோடியிடம் பொருளாதார நிபுணர்கள் இருந்தாலும் அவர்களின் ஆலோசனையைக் கேட்க அவர் தயாராக இல்லை. மோடி அரசாங்கம் திவாலாகி விட்டது என குற்றஞ்சாட்டினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details