சேலம்: எடப்பாடியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 20) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படவில்லை. அதனால், பொங்கல் பண்டிகையை உற்சாகமாக மக்கள் கொண்டாட முடியாத நிலையில் இருந்தனர். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
ஊடகங்கள் விவாதிக்கவில்லை
ஆனால், இதுகுறித்து ஊடகங்கள் விவாதிக்கவில்லை. அதே நேரத்தில், சமூக வலைத்தளங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் முறைகேடுகள் குறித்து செய்திகள் வைரலாகப் பரவி வருகின்றன.
நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் கரோனா அதிகமாகப் பரவி வருகிறது. ஆனால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தினமும் பேட்டி மட்டும் அளிக்கிறார்.
அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. இதையெல்லாம் மறைப்பதற்காக தான் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.
பொய் வழக்கு