சேலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தமாகாவிலிருந்து விலகிய தமாகா மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கோவை தங்கம் திமுகவில் இணைந்தார். மார்ச் 17ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகிய அவர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தன்னை கைவிட்டதோடு துரோகமிழைத்து விட்டதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுகவுடன் மீண்டும் கைகோர்த்த கோவை தங்கம் - சேலத்தில் திமுகவில் இணைந்த் கோவை தங்கம்
சேலம் : தமாகாவிலிருந்து விலகிய அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கோவை தங்கம், முக ஸ்டாலின் முன்னிலையில், மீண்டும் திமுகவில் இணைந்தார்.
![திமுகவுடன் மீண்டும் கைகோர்த்த கோவை தங்கம் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கட்சி நிர்வாகிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11132469-thumbnail-3x2-aa.jpg)
இன்று அவருடன் தமாகா மாநிலப் பொதுச் செயலாளர் ஞானசேகரன், முன்னாள் எம்எல்ஏவும் சேலம் மத்திய மாவட்ட தலைவருமான அன்பழகன், மாநிலச் செயலாளர்கள் பொன்.ஆனந்தகுமார், ராஜ்குமார், அதிமுகவைச் சேர்ந்த அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ராஜேந்திரன், அமமுக மாநில சிறுபான்மைப் பிரிவு இணைச்செயலாளர் மருத்துவர் தாரா ஷபி, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
கோவை தங்கம் ஏற்கனவே திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ், தமாகா கட்சிகளில் இணைந்து தற்போது மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார்.