சேலம் மாவட்டம் கூலமேடு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக கூலமேடு ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை எதிரொலி: கூலமேடு ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு - salem district news
சேலம்: தொடர் மழை காரணமாக கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் துரை தெரிவித்ததாவது, "கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானம் சேறும் சகதியுமாக மாறி விட்டது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெற்கில் ஜல்லிக்கட்டு, கிழக்கில் எருது சண்டை!