சேலம்:தேசிய தகவல் ஆணையத்துடனான காணொலி நேர்காணல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் காணொலி நேர்காணலில், இந்திய கலப்புத் திருமண தம்பதியர் சங்க மாநிலத் தலைவர் அழகேசன் மற்றும் திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பங்கேற்றனர்.
சாதிமறுப்புத் திருமணம் செய்தோருக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, "சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுவதில்லை. இந்த பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:30 நாட்களுக்குப் பட்டாசு கடை வைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - திருவாரூர் மாவட்ட ஆட்சியர்