கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்து வெளியிட்டது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் சுரேந்திரன் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சேலம் மாநகர சைபர் க்ரைம், சேலம் ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் சைபர் க்ரைமில் பதிவு செய்த வழக்கில் சேலம் நீதிமன்றம் இன்று (பிப். 17) சுரேந்திரனுக்கு முன்பிணை வழங்கியது. சேலம் ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கில் கடந்த திங்கள்கிழமையன்று, மேட்டூர் நீதிமன்றம் முன்பிணை வழங்கியது.
கறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு முன்பிணை வழங்கிய நீதிமன்றம் - சுரேந்திரனுக்கு முன்பிணை வழங்கிய நீதிமன்றம்
சேலம்: கறுப்பர் கூட்டம் விவகாரம் தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரேந்திரனுக்கு சேலம் நீதிமன்றம் முன்பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சுரேந்திரனுக்கு முன்பிணை வழங்கிய நீதிமன்றம்
ஏற்கெனவே ஜனவரி 21ஆம் சென்னை நீதிமன்றத்தில் முன்பிணை கிடைத்தும், கடந்த 4ஆம் தேதி குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டும் இதுவரை சென்னை புழல் சிறையில் உள்ள சுரேந்திரன் நாளை விடுதலையாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கறுப்பர் கூட்டம் விவகாரம்: இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம்