சேலம்:சேலம் அருகே தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே பள்ளியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இது குறித்து மாணவி, பள்ளி தாளாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மாணவி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துசாமி தலைமையில் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.