தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திப்ருகார் - கன்னியாகுமரி இடையே வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள்!

முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் திப்ருகார் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

special train
சிறப்பு ரயில்

By

Published : Feb 24, 2021, 7:35 PM IST

கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகார் பகுதிக்கு 2011ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இந்தியாவிலேயே அதிக தூரமாக, அதாவது 4273 கி.மீ. தூரம் இயக்கப்படும் ரயில் ஆகும். இந்நிலையில், இதே வழிதடத்தில் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

  • ரயில் எண் 05906 - திப்ருகார் - கன்னியாகுமரி வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயிலானது பிப்.27 ஆம் தேதி மாலை 07:25 மணிக்கு திப்ருகாரிலிருந்து புறப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் இரவு 10:00 மணிக்கு கன்னியாகுமரியை வந்தடைகிறது
  • ரயில் எண் 05905 கன்னியாகுமரி - திப்ருகார் வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயிலானது மார்ச் 4, 2021 இல் கன்னியாகுமரியிலிருந்து 17.30 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் இரவு 20.50 மணிக்கு திப்ருகாரை அடைகிறது.

சேலம் பிரிவில் உள்ள ரயில் நிலையங்களில் வரும் நேரம்:
திப்ருகார் - கன்னியாகுமரி வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயிலானது, சேலத்தில் - 07.52 / 07.55 மணிக்கும், ஈரோடில் - 08.50 / 08.55 மணிக்கும், திருப்பூரில் காலை 09.43 / 09.45 மணிக்கும், கோவையில் காலை - 10.42 / 10.45 மணிக்கும் சென்றடைகிறது

அதே போல, கன்னியாகுமரி - திப்ருகார் வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயிலானது, கோவையில் அதிகாலை - 04.12 / 04.15 மணிக்கும், திருப்பூரில் - 05.03 / 05.05 மணிக்கும், ஈரோடில் - 05.55 / 06.00 மணிக்கும், சேலத்தில் காலை 06.52 / 06.55 மணியளவில் வந்தடைகிறது.

இதையும் படிங்க:களைகட்டிய அண்ணா அறிவாலயம்! - ஒரே நாளில் 1,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details