தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா கார் ஓட்டுநர் மரண வழக்கு - மீண்டும் விசாரணை தொடக்கம்! - jayalalitha car driver murder case

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறையினர் இன்று மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடக்கம்
தொடக்கம்

By

Published : Oct 22, 2021, 12:56 PM IST

Updated : Oct 22, 2021, 1:46 PM IST

சேலம்:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1இல் வழக்கு விசாரணை நடைபெற்றது. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து கனகராஜ் மரணம் நிகழ்ந்ததால் கனகராஜ் மரணம் விபத்தல்ல, கொலை என சகோதரர் தனபால் புகார் தெரிவித்தார்.

விசாரணை தொடக்கம்

இந்த நிலையில் நேற்று (அக்.21) சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் கனகராஜ் மரண வழக்கை மீண்டும் விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதி பெற்றார்.

எடப்பாடியில் வசித்து வரும் கனகராஜின் அண்ணன் தனபாலை இன்று (அக்.22) காலை சேலம் மாவட்ட காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் ஆத்தூரில் உள்ள கனகராஜின் உறவினர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோரிடமும் சேலம் டிஐஜி மகேஸ்வரி நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

கனகராஜ் மரணம் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் டிரைவர் மரணத்தில் சந்தேகம்; ஸ்ரீஅபிநவ் மீண்டும் விசாரணை

Last Updated : Oct 22, 2021, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details