விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த மாதம் ஊருக்கு திரும்பினார். அப்பொழுது அவருக்கு சங்கராபுரம் வட்டம் செம்படாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.
திருமணமான ஏழாவது நாளில் புதுமணப்பெண் பலி!! - kallakurichi acccident
கள்ளக்குறிச்சி: திருமணமான ஏழாவது நாளில் புதுமணப்பெண் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கணவரின் கண்ணெதிரே பலியானார்.
![திருமணமான ஏழாவது நாளில் புதுமணப்பெண் பலி!!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4485089-31-4485089-1568867691715.jpg)
இந்நிலையில் பிரியதர்ஷினி அண்ணன் சந்தோஷ், பால முருகனையும், பிரியதர்ஷினியையும் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சிக்கு அழைத்து சென்ற போது எதிரே வந்த நபர் சந்தோஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் பிரியதர்ஷினி நடு ரோட்டில் கீழே விழுந்தார். அப்போது பைத்துந்துறையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி கணவரின் கண்ணெதிரே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் பிரியதர்ஷினியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.