தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜோக்கர் வேடமணிந்து கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய மேஜிக்மேன்!

சேலம்: கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வலியுறுத்தி மாயாஜால நிபுணர் ஜோக்கர் போல வேடமணிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

joker
joker

By

Published : Apr 15, 2020, 4:52 PM IST

சேலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. வீட்டைவிட்டு சாலைக்கு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் சேலம் காவல் துறையின் சார்பாகப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இதன் ஒருகட்டமாக அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் மாயாஜால வித்தைக்காரர் ராஜேந்திரன் ஜோக்கர்போல வேடமணிந்து பொதுமக்களிடையே கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஜோக்கர் போல வேடமணிந்து கரோனா வைரஸ் விழிப்புணர்வு

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாயாஜால வித்தைக்காரர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:உடல்பருமன் அதிகரிக்கிறதா? - வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details