சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அக்டோபர் 31ஆம் தேதி, சூரமங்கலம் பகுதியின் திமுக பிரமுகர் சரவணனின் இல்லத்திருமண விழா நடைபெற்றது.
இவ்விழாவில், மணமகன் அறையில் வைத்திருந்த 32 சவரன் நகைகள் மாயமானதைக் கண்ட மணமக்களின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக நவம்பர் 3ஆம் தேதி சூரமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
32 சவரன் நகைகளை திருடிய நபரை கைது செய்த காவல் துறையினர் இந்நிலையில், திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்த காவல் துறையினர், அதில் கிடைத்த ஆதாரங்களை வைத்து சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த மகபூப் அலி என்ற நபரை கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளியிடமிருந்து மண்டபத்தில் திருடிச்சென்ற ரூபாய் எட்டு லட்சம் மதிப்புள்ள 32 சவரன் நகைகளை காவல் துறையினர் மீட்டனர்.
இதையும் படிங்க : தொடர் திருட்டில் ஈடுபட்ட 15 வயது சிறுமி கைது!