சேலம்:சேலம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்தப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார். இதில் சேலம் நாமக்கல் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700 காளைகள் மற்றும் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
சீறிப்பாயந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மடக்கிப்பிடித்தனர்; பல காளைகள் வாடிவாசல் வழியாக ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து மாடுபிடி வீரர்களை திணறடித்து எல்லைக் கோட்டை தாண்டி சென்று பரிசுகளை வென்றன.
கூலமேடு ஜல்லிக்கட்டு 700 காளைகள் பங்கேற்பு இந்தச் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற சில காளைகளின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்க்காமல் இருந்ததால், ஒரு மாட்டின் கழுத்து கயிறு, தீபன் என்ற வாலிபரின் காலில் மாட்டி, மாடு அவரை இழுத்துச் சென்றதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜல்லிக்கட்டில் பங்கேற்ற, 20க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இந்த விழாவை சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் நேரில் வந்து கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க:ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அமைச்சர் ஜெயக்குமார்