தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பணி வழங்க பரிந்துரை செய்யக் கோரி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மனுவுடன் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குவிந்தனர். எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் மொத்த மதிப்பெண் அடிப்படையில் பின்னடைவை சந்தித்த எங்களுக்கு வயது வரம்பு காரணமாக அடுத்த ஆண்டு தகுதி தேர்வில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்த 2020 -21ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட வேண்டிய 10 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர் காலியிடங்களை நிரப்ப வேண்டும். கரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டு காவலர் தேர்வு நடைபெறுமா என்ற சூழ்நிலை நிலவுகிறது.