மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் தங்களது எதிர் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் கடந்த 24 நாட்களாக சிஏஏ-வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் தர்ணாவில் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடிய நிலையில், சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் போராட்டக்காரர்களை தடுத்தி நிறுத்தினர்.