குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பரவலாகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாட்டிலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் இயக்கங்களும் அச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்று போராட்டம் நடத்திவருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி சேலம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஐக்கிய ஜமாத் மற்றும் ஜமா அத்துல் சபை, இமாம்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு கூட்டமைப்புகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்: 5 ஆயிரம் பேர் பங்கேற்பு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் அன்வர் தலைமை வகித்தார். ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், இதில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தோரும் கலந்துகொண்டனர்.
தலைமை அஞ்சல் நிலையம், திருவள்ளூர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சூழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வெல்லும் - நடிகர் பார்த்திபன்!