தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேராகத் தனது சொந்த ஊரான சேலத்திற்கு வந்து தனது இல்லத்தில் தங்கியுள்ளார்.
பின்னர் சென்னை செல்வதற்காகப் புறப்பட்ட முதலமைச்சரிடம் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள், தங்களின் பகுதிகளில் உள்ள குறைகளை அவரிடம் மனுக்களாகக் கொடுத்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மிகக் கூடிய விரைவில் அதற்கான உரிய அதிகாரிகள் விசாரணை செய்து உரிய தீர்வினை வழங்குவார்கள் என்று உறுதியளித்தார்.
பின்னர் சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். இதில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்எல்ஏ வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் செம்மலை எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் சக்திவேல், வெற்றிவேல் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
முன்னாள் எம்எல்ஏ குருநாதன் மற்றும் ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அமமுகவினர் மற்றும் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: ரஜினி பட 'பஞ்ச்' பேசும் அழகிரி: செல்போனில் இருவரும் பேசியது என்ன?