தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிருக்கு ஆபத்து; காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமைடைந்த காதல் தம்பதி! - காதல் தம்பதி

சேலம்: க திருமணம் செய்துகொண்ட திருமண ஜோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்புக்கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

காதல் தம்பதி

By

Published : Sep 21, 2019, 7:03 PM IST

Updated : Sep 21, 2019, 7:15 PM IST

சேலம் மாவட்டம் பிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதே ஊரின் அங்கம்மாள் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் இருவரும் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களிடம் முறையீடுகையில், சுரேந்திரன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்குப் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய சிவகாமிக்கு, பாண்டிச்சேரியில் காதலன் சுரேந்திரனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட திருமண ஜோடி

இந்நிலையில் பெண்ணின் குடும்பத்திலிருந்து அவரது பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இருவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி இன்று சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புகோரி தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:

"புன்னகை மன்னன்" பட பாணியில் மலையிலிருந்து குதித்த காதல் ஜோடி!

Last Updated : Sep 21, 2019, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details