தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புகார் கொடுத்தவரை தரக்குறைவாக பேசிய போலீசுக்கு ரூ.2 லட்சம் அபராதம்! - salem district news

நிலபிரச்சனையில் புகார்தாரரை தரக்குறைவாக பேசியதற்காக இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு அளித்துள்ளது.

Etv Bharatதரக்குறைவாக பேசிய இன்ஸ்பெக்டருக்கு அபராதம் - மனித உரிமைகள் ஆணையம்
Etv Bharatதரக்குறைவாக பேசிய இன்ஸ்பெக்டருக்கு அபராதம் - மனித உரிமைகள் ஆணையம்

By

Published : Dec 22, 2022, 2:17 PM IST

சேலம்: ஏற்காட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஆனந்தன், கொளகூர் பகுதியை சேர்ந்த ராமதுரை என்பவரின் நிலப்பிரச்சனை தொடர்பாக விசாரணைக்கு சென்ற இடத்தில், ராமதுரையை பழங்குடி சமூகத்தை குறிப்பிட்டு தரக்குறைவாக, பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக மாநில மனித உரிமை ஆணையத்தின் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு, காவல் ஆய்வாளர் ஆனந்தன் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீடு தொகையை அரசு உள்துறை முதன்மைச் செயலாளர் வழங்கவேண்டும் என்றும், அந்த தொகையை ஆய்வாளரிடம் இருந்து வசூல் செய்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. காவல் ஆய்வாளராக பணிபுரிந்த ஆனந்தன் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details