தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் ஆய்வாளர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட ரவுடி - காவல் ஆய்வாளர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரவுடி

சேலம்: பிரபல ரவுடியுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய காவல் ஆய்வாளர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Birthday
Birthday

By

Published : Nov 16, 2020, 12:53 PM IST

சேலம் வாழப்பாடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியம். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த இவர் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு ஆய்வாளர் சுப்பிரமணியம் விடுமுறை எடுத்துள்ளார். அப்போது பிரபல ரவுடி சங்கருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை சுப்பிரமணியம் கொண்டாடி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சங்கர் மீது பல வழக்குகள் காவல்நிலையத்தில் உள்ளது.

காவல் ஆய்வாளர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரவுடி சங்கர்

மேலும் இந்த புகைப்படத்தில் கரியகோயில் காவல் நிலையத்திற்கு தனி இட மாற்றம் செய்யப்பட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் அருண்குமார், காரிப்பட்டி அருண்குமார், ஓட்டுநர்கள் இரண்டு பேரும் உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது காவல் துறை அலுவலர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது
.

ABOUT THE AUTHOR

...view details