சேலம்:காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து இன்று காலை 10 மணி அளவில் இருந்து, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 21,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டிஎம்சி ஆகவும் உள்ளது. பிலிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 11,600 கன அடியாக உள்ளது.
இந்நிலையில், அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு காலை 8 மணி முதல் 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 10 மணியில் இருந்து மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 21 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.