தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி - salem district news

வணிகர்கள் போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

income tax minister review meeting
income tax minister review meeting

By

Published : Jul 13, 2021, 7:03 PM IST

சேலம்: ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் வணிகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 13) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை அமைச்சர் முன்னிலையில் தெரிவித்தனர்.

வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை

பின்னர், கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, ”அனைத்து வணிக நிறுவனங்களும் நிலுவையில் உள்ள வரி பாக்கியை விரைந்து செலுத்த வேண்டும். போலி ரசீது மூலம் வரி ஏய்ப்புச் செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ”எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைச் செயலர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி முதன்மை ஆணையர் சித்திக், வணிகவரித் துறை உயர் அலுவலர்கள்,எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
மேலும் இன்று (ஜூலை 13) மாலை சேலம் உள்பட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் மூர்த்தி ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details