தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்! - சேலம்

பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் புலம் பெயர் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து சேலம் போலீசார் விழிப்புணர் ஏற்படுத்தினர். அப்போது, தமிழ்நாடு அரசு அறிவித்த தொலைபேசி எண்ணில் எந்த நேரத்திலும் அழைத்து உதவிக கோரலாம் என்றும் காவல்துறையினர் அவர்களிடம் தெரிவித்தனர்.

in Salem police create awareness to the North indian workers
சேலத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்கள்

By

Published : Mar 5, 2023, 10:08 AM IST

Updated : Mar 5, 2023, 10:33 AM IST

சேலம்: தமிழகத்தில் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் புலம் பெயர் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தங்கி பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தில் பணியாற்றிவரும் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வடமாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் தகவல்கள் பரவின. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வட மாநில தொழிலாளர்களை பாதுகாத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் வேறு இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவம் என்று போலியாக திரித்து வதந்தி பரப்பியவர்களை கைது செய்வதற்கு தமிழக காவல்துறை சார்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கப்பட்டிருந்தது. தற்போது வதந்தி பரப்பியவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் டெல்லி, பீகார் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் சாரை சாரையாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். அவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் தாக்குதல் நடத்தப்படுவதால் அவர்கள் பயத்தில் ஊருக்கு கிளாம்புவதாகவும் தகவல் பரப்பப்பட்டு வந்தது.

இந்த சூழலில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை வெளியிட்டு அவர்கள் புகார் தெரிவிப்பதற்கான இலவச தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நிறுவனங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு சென்று உங்களுக்கு தமிழக முதலமைச்சரும், தமிழக காவல் துறையும் பாதுகாப்பாக இருக்கும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கான தொலைபேசி எண்ணையும் வழங்கினர்.

இதேபோல சேலம் மாவட்டம் மல்லூரில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கான தொலைபேசி எண்ணையும் வழங்கினர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள வட மாநிலத்தவர்கள் பணியாற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் சென்று காவல்துறை சார்பில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய சேலம் கலெக்டர்!

Last Updated : Mar 5, 2023, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details