தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட்டிக்கு பணம் கொடுத்தவர் குடும்பத்தோடு தற்கொலை! - money interest

சேலம்: வட்டிக்கு கொடுத்த பணம் திரும்பி வராத விரக்தியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

வட்டிக்கு பணம் கொடுத்தவர் தற்கொலை

By

Published : Apr 2, 2019, 12:12 PM IST

சேலம் கருங்கல்பட்டி அருகே சிவராமன் என்பவர் மனைவி புஷ்பா,மகன் பாபு ஆகியோருடன் வசித்து வந்தார். இதில் பாபு மனவளர்ச்சி குன்றியவர் என கூறப்படுகிறது. மேலும் சிவராமன் அருகாமையில் உள்ள தெரிந்தவர்கள் மற்றும் நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து, அந்த வட்டி பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொடுத்த கடனை யாரும் சரியாக திருப்பி கொடுக்காததால் சிவராமன் வறுமையில் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

பணம் திரும்ப வராத விரக்தியால் மனமுடைந்த சிவராமன் நேற்று இரவு மனைவி மற்றும் மகனுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.


இன்று காலை சிவராமன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அக்கம்பக்கத்தினர் செவ்வாய்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details