சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தொடர்ந்து மேலும் நீட்டிக்கப்பட்டும். இது நேற்று (ஜூன் 30) ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன், சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
ஊரடங்கு நாள்களில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார், அரசு பொதுப் போக்குவரத்து சேவை இன்று (ஜூன் 1) முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றது.
அதுமட்டுமின்றி 5,12, 19, 26 ஜூலை ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி சேலம் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது.
ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் நடைமுறையில் இருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர நாள்தோறும் மாலை 5.00 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த 144- தடை உத்தரவு முன்னிட்டு பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க...ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னை ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்