சேலம் சின்னம்மாபாளையம் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
அங்கன்வாடி மையத்தின் வாயிலின் அருகில் அதிக அளவு குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது, இதனால் குழந்தைகள், பெரியவர்கள் டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிப்புக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் கொட்டப்படும் குப்பையைதினந்தோறும் அகற்றாமல் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்து அகற்றுவதால்,அங்கு எப்போதும் துர்நாற்றம் வீசுவதாகவும் இது குறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் அதனைக் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.