தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக செயல்படும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் 500 அடிக்கு கீழ் சென்றுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் நிலத்தடி நீரை உறிஞ்ச தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலத்தில் குடிநீர் கேன் உற்பத்தி நிலையங்கள் நிலத்தடி நீரை முறைகேடாக எடுப்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர்கள், நிலவியல் அலுவலர்கள் தலைமையில் அலுவலர்கள் இரண்டு நாள்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில் சேலத்தில் முறைகேடாக நீர் உறிஞ்சுவது, அனுமதி பெறாமல் இயங்கிவந்தது, உரிமம் புதுப்பிக்காமல் 31 குடிநீர் கேன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்தக் குடிநீர் கேன் உற்பத்தி நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், 9 நிறுவனங்கள் மட்டும் உரிய அனுமதியோடு இயங்கிவருவதாகவும் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
முறைகேடாக செயல்பட்டு வந்த குடிநீர் உற்பத்தி நிலையங்கள் இதையும் படிங்க... போலி ஆதாரில் இந்தியாவில் உலாவிய வெளிநாட்டுப் பெண்: மடக்கிப்பிடித்த மதுரை காவல் துறை!