தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏற்காட்டில் சாலையோர கடைகள் அகற்றம் - salem road side street shops removed

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றப்பட்டன. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஏற்காட்டில் சாலையோரம் அமைக்கப்பட்ட கடைகள் அகற்றம்
ஏற்காட்டில் சாலையோரம் அமைக்கப்பட்ட கடைகள் அகற்றம்

By

Published : Apr 23, 2022, 6:46 AM IST

சேலம்: ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் சாலையோர கடைகள் அதிக அளவில் செயல்பட்டு வந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று கடைகளை அகற்றி நடவடிக்கை எடுத்தார் .
இதனால் சாலையோர கடை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் கடை அமைக்க அனுமதி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

இந்த நிலையில் இன்று ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் சாலையோர கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர் . தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தினர் .

கடைகள் அகற்றப்படும் போது சாலையோர வியாபாரிகளுக்கும்,நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் .

இதையும் படிங்க:பெயர் பலகைகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை!- சென்னை மாநகராட்சி அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details