தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவம்: போலி மருத்துவரின் உதவியாளர் கைது! - காவல்துறை விசாரணை

சேலம்: சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட போலி மருத்துவரின் உதவியாளரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

Illegal abortion incident: Fake doctor's assistant arrested
Illegal abortion incident: Fake doctor's assistant arrested

By

Published : Feb 16, 2021, 10:35 AM IST

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் மல்லியகரை பகுதியில் பெண் ஒருவருக்கு, தனியார் கிளினிக் ஒன்றில் சட்டவிரோதமாக கருகலைப்பு சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கருக்கலைப்பு செயலில் ஈடுபட்ட போலி மருத்துவருக்கு உதவியாளரும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தென்னரசு (24) என்பவர் தலைமறைவானார். அவரை மல்லியகரை காவல் துறையினர் வலைவீசி தேடிவந்தனர்.

இந்நிலையில் திட்டக்குடி அருகே தென்னரசுவை கைதுசெய்துள்ளதாக மல்லியகரை காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கைதுசெய்யப்பட்ட தென்னரசு மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு: இளைஞர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details