சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் கோராத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (33). அந்தப் பகுதியில் கேபிள் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும், சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த மோனிஷா (19) என்பவருக்கும் கடந்த 32 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இருவரும் கோராத்துக்காடு பகுதியில் வசித்து வந்தனர். திருமணம் நடந்தது முதல் தங்கராஜ் தனது மனைவி மோனிஷாவின் நடவடிக்கையில் அடிக்கடி சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 6) இரவும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 7) காலை வெகுநேரமாகியும் மோனிஷாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.