சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவருக்கும் மனைவி கல்பனாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே இன்று (ஏப்ரல்.23) மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த பாஸ்கர் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்பனா, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.