தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை!! - salem news

சேலத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக கிணற்றில் குதித்து கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 4, 2023, 3:10 PM IST

சேலம் மாநகர் திருவாகவுண்டனூர் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி அடுத்த மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (32). இவருடைய மனைவி சீதா(30). இவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள ஆலோ பிரிக்ஸ் (சிமெண்ட் கற்கள்) தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக, பழனிச்சாமி- சீதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து சீதா கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வேகமாக சென்று உள்ளார்.

அப்போது தற்கொலை செய்யும் நோக்கத்துடன் அதே பகுதியில் உள்ள கிணற்றிற்கு சென்ற கீதா கிணற்றில் குதித்துள்ளார். பின் தொடர்ந்து சென்ற பழனிச்சாமி, மனைவி கிணற்றில் குதித்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அவரும் கிணற்றுக்குள் குதித்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாமல் சிறிது நேரத்திற்குள் மூச்சு திணறி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாய் தந்தை இருவரும் கிணற்றில் குதித்ததைப் பார்த்த இரண்டு குழந்தைகளும் கத்தி கூச்சல் இட்டனர். குழந்தைகளின் கூச்சல் சத்ததை கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதிக்கு வந்த சூரமங்கலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்த கணவன் மனைவி இருவர் உடலையும் சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.

தொடர்ந்து இருவரது உடல்களையும் உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல. ஒருவேளை, உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினாலோ அல்லது அதுகுறித்த சந்தேகங்கள் ஏற்பட்டாலோ, வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் இடைவிடாது செயல்படும் சினேகா அறக்கட்டளையின் 044 - 24640050 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் டாடா நிறுவனத்தின் 9152987821 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளை பெறலாம்.

இதையும் படிங்க: சேலம் நீதிமன்ற வளாகத்தில் கைதி தர்ணா: போலீசார் சமரசம்

ABOUT THE AUTHOR

...view details