சேலம் மாவட்டம் புளியம்பட்டி ஈசன் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர்கள் தம்பதி தங்கமணி (59), ரத்னா (48). இருவரும் விசைத்தறி தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மகன் ராஜா அண்ணாமலை (25) எம்.பி.ஏ முடித்துவிட்டு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மகுடஞ்சாவடியில் உள்ள பெண் ஒருவரை தம்பதி தங்கள் மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். பின்னர் ராஜா அண்ணாமலை, அந்த பெண்ணை தனக்கு பிடிக்கவில்லை, திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது.