தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உணவகங்களில் சாப்பிட அச்சம் வேண்டாம்' - உரிமையாளர்கள் வேண்டுகோள்! - இன்று முதல் உணவகங்கள் திறப்பு

சேலம்: உணவகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதால் பொதுமக்கள் உணவகங்களில் சாப்பிட அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சேலம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Hotels in Salem to open today
Hotels in Salem to open today

By

Published : Jun 8, 2020, 6:04 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில், மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் தற்போது சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவித்து வருகின்றன.

தமிழ்நாடு அரசு இன்று முதல் உணவகங்கள், தங்கும் விடுதிகள் இயங்க அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. உணவகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களும் உணவகங்களில் பணிபுரிபவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும்; அவர்களின் உடல் வெப்பநிலை உணவக ஊழியரால் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தகுந்த இடைவெளியை உணவகங்களில் கடைப்பிடிக்கவேண்டும் என்றும்; கைகளை கிருமிநாசினி கொண்டு கட்டாயம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மூடப்பட்டிருந்த உணவகங்கள், இன்று காலை திறக்கப்பட்டன. 50 விழுக்காடு வாடிக்கையாளர்களை உணவகங்கள் உள்ளே அமர வைத்து, உணவு வழங்கலாம் என்ற விதிமுறையை உணவக உரிமையாளர்கள் பின்பற்றிவருகிறார்கள்.

சேலத்தில் உணவகங்கள் திறப்பு

இதுதொடர்பாக சேலம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பழனிசாமி கூறுகையில், "வாடிக்கையாளர்கள் எவ்வித அச்சமுமின்றி உணவகங்களுக்கு வந்து சாப்பிடலாம்.

வாடிக்கையாளர்களுக்கு என வெப்பநிலையைக் கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவகங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம்.

அதேபோல, கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது. தடை காலத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், ஜிஎஸ்டியிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ’ஒட்டுமொத்த சென்னையிலும் கரோனா கிடையாது’

ABOUT THE AUTHOR

...view details