சேலம்: கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் (ஜுன் 25) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த தமிழரசன் என்பவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த இந்து முன்னணி பிரமுகர் செல்லப்பாண்டியன், அவரது நண்பர் தமிழரசனுக்கு ஆதரவாகப் பேசியதோடு, காவல்துறையினரையும் மிரட்டியுள்ளார். அவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.