தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களை சீரமைக்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிக்கப்படும் - இந்து மகா சபை

சேலம்: கோட்டை மாரியம்மன், சுகவனேஸ்வரர் உள்ளிட்ட பெரிய கோயில்களில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட திருப்பணிகள் விரைந்து செய்யப்பட வேண்டும் என்று இந்து மகா சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindu maha saba
Hindu maha saba

By

Published : Dec 3, 2019, 7:07 AM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இந்து மகா சபை அமைப்பு சார்பில் 30க்கும் மேற்பட்டோர் திரளாக வந்திருந்து மனு அளித்தனர். அந்த மனுவில், சேலம் மாநகர் பகுதியில் அமைந்துள்ள குகை மாரியம்மன் ஆலயம், கோட்டை மாரியம்மன் ஆலயம், சுகவனேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பழமையான கோயில்களில் திருப்பணிகள் நடைபெறாமல் உள்ளது.

எனவே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுத்து சேலத்தின் பழமையான கோயில்களில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட திருப்பணிகள் விரைந்து நடத்திட வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பின் பேட்டியளித்த இந்து மகா சபை தலைவர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மகா சபையின் தலைவர் பாலசுப்பிரமணியன், சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள தேரை செப்பனிட வேண்டும், அங்கு புதிய யானை கொண்டு வர வேண்டும். குகை மாரியம்மன் கோயிலில் உள்ள முருகன் சிலையை சீரமைக்க வேண்டும். இத்திருபணிகளை விரைந்து செய்திடவேண்டும் இல்லையென்றால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details