சேலத்தில் உள்ள சகாதேவபுரத்தில் இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை சார்பில், இலவச சித்த மருத்துவ மூலிகைக் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட இயற்கை மூலிகைகள், செடிகள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்ட மூலிகைச் செடிகளின் அறிவியல் பெயர், புனைப் பெயர்களுடன் அதன் பயன்பாடு குறித்து காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், உணவு கலப்படம் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக செயல் விளக்கமும் காண்பிக்கப்பட்டது.