சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள், கூலி வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சில நேரங்களில் மிதமான மழை பெய்து அவர்களை மகிழ்வித்தாலும், வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது.
சேலம் மக்களை மகிழ்வித்த திடீர் கனமழை! - salem
சேலம்: மாநகரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மக்களை மகிழ்வித்த திடீர் கனமழை
இந்நிலையில் இன்று மாலை மாநகருக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை, நான்கு ரோடு, அயோத்தியாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.