சேர்வராயன் மலைத்தொடரில் ஏற்காடு உள்ளிட்ட 67 மலைக் கிராமங்கள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக சேர்வராயன் மலைத்தொடரில் இரவு நேரத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. உச்சபட்ச அளவாக ஏற்காட்டில் 14 மில்லி மீட்டர் மழை அளவு நேற்று பதிவாகி இருந்ததாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழையால், சாலைகளில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மரங்கள் முறிந்து சாலையின் நடுவில் விழுந்து கிடப்பதால் கிராம மக்கள் வெளியே வர இயலாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கோபி கூறுகையில், 'ஒரு ஆண்டிற்கு முன்பாக அரங்கம் பகுதியிலிருந்து கோவிலூர் வரைக்கும் ஏழு கிலோமீட்டர் சாலையை சீரமைத்து தார் சாலையாக மாற்ற சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. முதல்கட்டமாக சாலையின் மேடு, பள்ளங்களை சரி செய்யும் பணியைத் தொடங்கிய மாவட்ட நிர்வாகம் என்ன காரணத்தினாலோ திடீரென்று சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டது.