தெற்கு ரயில்வேயின் ஒரு புதிய முயற்சியாக, 138 டன் எடையுள்ள டோன்ட் பால் சேலத்திலிருந்து நாகாலாந்தின் திமாபூருக்கு சிறப்பு சரக்கு ரயிலில் கொண்டுசெல்லப்பட்டது. தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் பார்சல்களை கொண்டுசெல்வதற்குப் பயன்படுத்தப்பட்டன.
இத்தகைய முயற்சிகளின் தொடர்ச்சியாக, இன்று ( நவ. 03 ) 32 வேகன்களில் ஏற்றப்பட்ட 83 அறுவடை இயந்திரங்கள் சின்ன சேலத்திலிருந்து ஆந்திராவின் எலுருவுக்கு கொண்டுசெல்லப்பட்டன. அறுவடை இயந்திரங்களைக் கொண்டு சின்ன சேலத்திலிருந்து புறப்படும் ஐந்தாவது ரயில் இதுவாகும்.