சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள திருமானூர் ஊராட்சி பகுதியில் சுதந்திர தின விழாவையொட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராம வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர்.
சட்டவிரோத டாஸ்மாக் மதுபான விற்பனை - தடைகோரி தீர்மானம்! - திருமானூர்
சேலம்: வாழப்பாடி அருகே திருமானூர் ஊராட்சி பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபான விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கள்ளச்சாராயம் விற்க அனுமதி இல்லை
இந்தக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலரிடம் கிராமத்தின் முக்கிய பிரச்னைகளான சாலை, குடிநீர், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து மனு அளித்தனர்.
மேலும், இதில் திருமானூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக நடக்கும் டாஸ்மாக் மதுபான விற்பனையை தடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Last Updated : Aug 16, 2019, 6:54 AM IST