தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓமலூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி - சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன்

சேலம்: மனிதநேய வாரவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார்.

ஓமலூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ஓமலூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

By

Published : Jan 25, 2020, 8:52 AM IST

சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில், மனிதநேய வாரவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தொடங்கிவைத்தார் இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் நடைமுறைக்கு வரவுள்ள திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் ராமன் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு வழங்கினார்.

ஓமலூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

மேலும் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுவரும் மக்கள் நல திட்டங்கள் குறித்த விளக்க குறும்படம் நடமாடும் வாகனத்தில் ஒளிபரப்பட்டதை மக்களோடு இருந்து ஆட்சியர் கண்டுகளித்தார். இந்நிகழ்ச்சியில் ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் உள்பட அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மிஷ்கின் எனக்கு இரண்டு சாய்ஸ் கொடுத்தார் - உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details