தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘திமுக கைவசம் இருந்த தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுக சாதனை’ - ஜி.கே. மணி - salem gk mani speech

சேலம்: நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுக கைவசமிருந்த இரண்டு தொகுதிகளை அதிமுக கைப்பற்றி இமாலய சாதனையை படைத்துள்ளதாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. மணி

By

Published : Oct 25, 2019, 1:54 PM IST

சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளை அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே. மணி கூறியதாவது;

செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி
  • தமிழ்நாட்டில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.
  • திமுக கைவசம் இருந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி இமாலய சாதனையை படைத்துள்ளது.
  • நாங்கள் நடத்தக்கூடிய கல்வி அறக்கட்டளையில் எந்த தவறும் நடக்கவில்லை. ஒரு சின்ன தவறு இருந்தாலும் எங்களது நிலத்தை எடுத்துக் கொள்ளலாம் என சட்டப்பேரவையிலேயே நான் பேசியிருந்தேன்.
  • பஞ்சமி நிலம் குறித்து பிரச்னை எழுப்பியது திமுகதான். எனவே உண்மை நிலவரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கான ஆவணங்களை உடனே வெளியிட வேண்டும்.
  • நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூறியுள்ளது. தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய நிதி கிடைக்கவில்லை.
  • குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரவேண்டிய நிதியும் வரவில்லை. நிதி ஒதுக்கினால்தான் உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சியடையும் அடிப்படை பிரச்னைகள் அப்போதுதான் தீர்க்கப்படும்.
  • உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதலமைச்சருடன் பேசியிருக்கிறோம். உள்ளாட்சித் துறை அமைச்சரிடமும் பேசியிருக்கிறோம். விரைவில் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.​​​​​​​

ABOUT THE AUTHOR

...view details