தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிலிண்டர் வெடித்து தீ விபத்து: ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்! - gas cylinder fire accident

சேலம்: ஓமலூர் அருகே வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்து தீபிடித்த விபத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

சிலிண்டர் வெடித்து தீ விபத்து
சிலிண்டர் வெடித்து தீ விபத்து

By

Published : Dec 11, 2019, 8:25 AM IST

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள கருத்தானூரில் இருளப்பன் என்பவருடைய மகன் சின்னப்பையன் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மணி என்ற மனைவியும் தமிழரசன், சிலம்பரசன் என்ற மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சின்னபையன் தாயார் ஸ்ரீதேவி சமைப்பதற்காக வீட்டு உபயோக சிலிண்டரை பற்ற வைக்கும்போது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீபிடித்தது. இதைத்தொடர்ந்து சமையல் அறையில் எரிந்து கொண்டிருந்த சிலிண்டரை வீட்டு வராண்டாவுக்கு கொண்டு வந்து சின்னபையன் அணைக்க முயன்றார்.

அப்போது தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. இதில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 3 சவரம் நகை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் மதிப்பு 2லட்சம் ரூபாய் ஆகும்.

சிலிண்டர் வெடித்து தீ விபத்து

வீட்டு உபயோகிக்கும் சிலிண்டரை பராமரிப்பு வேலைகளை சரியாக ஒப்பந்ததாரர்கள் செய்திருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது எனவும், இனி வரும் காலங்களில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பராமரிப்பு செய்யும் பணிகளை ஒப்பந்ததாரர்கள் செய்யவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீட்டில் உபயோகித்த சிலிண்டரில் எரிவாயு கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து , தீ பிடித்து வீடு எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details