நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப விநாயகர் சிலையும் ஆண்டுதோறும் புதுமையான முறையில் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் சேலம் செவ்வாய்பேட்டை அருகே ஃப்ளோரசன்ட் ரேடியம் என்ற தொழில்நுட்பம் மூலம் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ளோரசன்ட் ரேடியம்' தொழில்நுட்பத்தில் விநாயகர் சதுர்த்தி ஃப்ளோரசன்ட் ரேடியம் என்பது ஒருவகையான திரவம். இது பலவண்ணங்களில் கிடைக்கக்கூடியது. இந்த திரவத்தை ஏதாவது ஒரு பொருளின் மீது பூசிவிட்டு விளக்கு அணைக்கப்பட்டாலும் அத்திரவம் ஒளிர கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. இதில் வர்ண விளக்குகளுக்கேற்ப மிளிர கூடிய திரவமும் உண்டு.
எனவே இதனை கொண்டு புதுமையாக விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வண்ண வண்ண ஃப்ளோரசன்ட் ரேடியத்தால் அலங்கரிக்கபட்டுள்ளதால் வண்ணமயமாக காட்சியளிக்கிறது அந்த விநாயகர் சிலை. இதனை பொதுமக்கள் வியப்புடன் கண்டு, வழிபட்டு செல்கின்றனர்.