தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் ரயில் நிலையம் அருகே முதியவர் சடலம் கண்டெடுப்பு - salem junction old man suicide

சேலம்: ரயில் நிலையம் அருகே உள்ள மரத்தில் முதியவர் ஒருவர் சந்தேகமான முறையில் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Salem
old man suicide

By

Published : Dec 11, 2019, 12:27 PM IST

சேலம் ரயில் நிலையம் அருகே உள்ள மரத்தில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், சடலமாக தொங்குவதை கண்டு அப்பகுதி மக்கள் சூரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதியவர் சடலம் கண்டெடுப்பு

அதன்பின் முதியவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு சென்றார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மே.வங்கத்தில் ரயில் மோதி 2 யானைகள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details