சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதித்த 24 பேர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
முன்னதாக பத்து பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, டெல்லி சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பிய தாரமங்கலத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த எடப்பாடியைச் சேர்ந்த ஒரு பெண், களரம்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய நால்வரும் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையடுத்து சேலம் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து திரும்பியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.