தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்காக சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி சேலம் வந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "1972 ஆண்டு முதல் அதிமுக வெற்றி தோல்விகளை சந்தித்துவருகிறது. தோல்வி என்பது எங்களுக்கு புதிதல்ல. அரசியலில் வெற்றி தோல்வி மாறி மாறி வருவது சகஜம். மீண்டும் அதிமுக வெற்றி பெறும்.