சேலம் மாவட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தலைமை மருத்துவமனையாகச் செயல்பட்டுவருகிறது. இங்கு நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இவர்களுக்காக மருத்துவமனை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட தேநீர், சிற்றுண்டி கடைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கடைகளில் நோயாளிகள், பொதுமக்களுக்கு தரமில்லாத உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.