தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டுப்புறக் கலைஞர்களின் கரோனா பாடல் - விழிப்புணர்வு பாடல்

சேலம்: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாட்டுப்புறக் கலைஞர்கள் விழிப்புணர்வு பாடல் எழுதி, அதனைப் பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது அனைவரையும் ஈர்த்துள்ளது.

நாட்டுப்புறக் கலைஞர்களின் கரோனா பாடல்
நாட்டுப்புறக் கலைஞர்களின் கரோனா பாடல்

By

Published : Apr 13, 2020, 11:57 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பாடல்களைப் பாடி பொதுமக்களுக்கு இசைக் கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நாட்டுப்புறக் கலைஞர்களின் கரோனா பாடல்

இந்நிலையில் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டியில் வசிக்கும் நாட்டுப்புறக் கலைஞரான தம்பிதுரை என்பவர், விழிப்புணர்வு பாடலை எழுதி தனது இசைக்குழுவினருடன் இசையமைத்து பாடியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பிரத்தியேக பாடலை எழுதி, பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பாடலை தொளசம்பட்டி பகுதியில் தினமும் இசைக் கலைஞர்கள் பாடி வருவதை, இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஷாக்ஸில் முகமூடி செய்வது எப்படி: இன்ஸ்டாவில் க்ளாஸ் எடுத்த அடா சர்மா

ABOUT THE AUTHOR

...view details